ஆளுமை:பூலட்சுமி, சுப்புரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:13, 5 மே 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy, ஆளுமை: பூலட்சுமி, சுப்புரமணியம் பக்கத்தை ஆளுமை:பூலட்சுமி, சுப்புரமணியம் என்ற தலைப்புக்...)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பூலட்சுமி
தந்தை சுப்புரமணியம்
தாய் தில்லையாச்சி
பிறப்பு 1950-10-12
ஊர் சுழிபுரம்
வகை கர்நாடக சங்கீதம்(வயலின்)
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூலட்சுமி, சுப்புரமணியம் அவர்கள் (1950-10-12-) இல் யாழ்ப்பாண சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட கர்நாடக சங்கீத ஆசிரியர். இவரது தந்தை சுப்புரமணியம்; தாய் தில்லையாச்சி. இவர் 1957 ஆம் ஆண்டு தொடக்கம் 1958 ஆம் ஆண்டு வரை கொழும்பு கல்கிசை பெண்கள் உயர் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை கற்றார். தொடர்ந்து 1959 ஆம் ஆண்டு தொடக்கம் 1963 ஆம் ஆண்டு வரை சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலையில் கற்றார். பின்னர் 1964 ஆம் ஆண்டு தொடக்கம் 1969 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் விக்டோரியா கல்லூரியில் கல்வி பயின்றார்.

1984 ஆம் ஆண்டு ஆசிரியர் பணி கிடைக்கப்பெற்றது. 1984 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் கற்பித்தார். பின்னர் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2008 ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் கற்பித்தார். அது மட்டுமன்றி அக்கல்லூரியிலே பிரதி அதிபராகவும் கடமையாற்றினார். வயலின் ஆசிரியராக 1990 ஆம் ஆண்டு கவின்கலைக் கல்லூரியில் கற்பித்தார். பாடசாலை காலங்களில் 2008 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்று கலைப்பணியை கைவிடாது கலைக்கல்லூரிகளில் சேவையாற்றினார். பாமடிப் பிள்ளையார் சித்தி விநாயகர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியராக 2014 ஆம் ஆண்டு இலிருந்து கடமையாற்றி வருகின்றார்.

இந்து கலாசார திணைக்களத்தால் கலாபூசண விருதிற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளார். வட்டக்கச்சி பிரமாலயா கல்லூரியில் வழங்கப்பட்ட மூத்த கலைஞர் எனவும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.