ஆளுமை:சிராணி, மில்ஸ்

நூலகம் இல் இருந்து
Tharsiga (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:10, 9 மார்ச் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிராணி
தந்தை வண.பிதா.என்.டபிள்யு.ஜி.சுகுணராஜா
தாய் கமலா
பிறப்பு 1956.09.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
ShiraneeMills.jpg

சிராணி, மில்ஸ் (1956.09.07) யாழ்ப்பாணம் உடுவிலில் பிறந்த கல்வியியலாளர். இவரது தந்தை வண.பிதா என்.டபிள்யு.ஜி.சுகுணராஜா; தாய் கமலா. ஆரம்ப கல்வி தொடக்கம் உயர்கல்வி வரை உடுவில் மகளிர் கல்லூரியில் கற்றார். களனி பல்கலைக்கழக இளமானிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பெண்ணியக் கல்வி தொடர்பான முதுமாணி பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்தோடு கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவும் பெற்றுள்ளார். உடுவில் மகளிர் கல்லூரியின் மாணவியாக இருந்து பின்னர் அப் பாடசாலையில் ஆசிரியராகவும் பணியாற்றித் தொடர்ந்து உப அதிபராகவும் பின்னர் 12 வருடம் அதிபராகவும் பணியாற்றியுள்ளார் சிராணி மில்ஸ். அதிபராக இருந்து ஓய்வுப் பெற்ற பின்னர் தற்பொழுது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றி வருகிறார். Licentiate of the Trinity College of Music London இல் இசைத்துறை சார்ந்த தேர்ச்சி பெற்றுள்ளார். பாடல்கள் பாடுவதிலும், கிட்டார் வாசிப்பதிலும் திறமையானவர். ஆங்கில மொழியில் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டுள்ள சிராணி மில்ஸின் கவிதைகள் நிவேதினி ஆங்கில சஞ்சிகை உட்பட ஒருசில சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. In Gods Image என்னும் சஞ்சிகையில் கிறிஸ்தவ மதத்தில் பெண்ணியம் என்னும் நோக்கில் கட்டுரை எழுதியுள்ளார் சிராணி.

அவர் CEDA வில் அபிவிருத்தி ஆலோசகராகவும் ADB அபிவிருத்திதுறையில் ஒரு பால்நிலை சார் நிபுணராகவும் பணியாற்றினார். எதிர்கால சந்ததியினர் வன்முறை மற்றும் சமத்துவமின்மை அற்ற உலகில் வாழ வேண்டும் என்பதற்காக பாடுபடுபவர்.

குறிப்பு : மேற்படி பதிவு சிராணி, மில்ஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சிராணி,_மில்ஸ்&oldid=505558" இருந்து மீள்விக்கப்பட்டது