ஆளுமை:முஹம்மட் றபீக், அசனார்
பெயர் | அசனார் முஹம்மது றபீக் |
தந்தை | அசனார் |
பிறப்பு | 1957.08.15 |
ஊர் | மருதமுனை, அம்பாறை |
வகை | நாட்டுப்புறக் கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அசனார் முஹம்மது றபீக் அவர்கள் (பி.1957.08.15) கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், கல்முனை பிரதேசத்தில் 1957ம் ஆண்டு அசனார் தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார்.
இவர் நாடகத்துறையில் முத்திரை பதித்த ஒரு நாடக நடிகரும், நாடக ஆசிரியரும், இயக்குனருமாவார். றபீக் அவர்கள் கமு/அல்-மனார் மத்திய கல்லூரி மருதமுனை, கமு/ஷம்ஸ் மத்திய கல்லூரி மருதமுனை, கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை- கல்முனை ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
தற்போது கமு/அல்-மனார் மத்திய கல்லூரியில் பாடசாலைக் காரியாலய ஊழியராகப் பணி புரிந்தார். 1970,80களில் நாடகத்துறையினூடாக கல்முனைப் பிரதேசத்தில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர்.
இவர் 1972ம் ஆண்டில் "கலைக்கூடல்" எனும் அமைப்பை உருவாக்குவதிலும், உறுப்பினர்களைச் சேர்த்துக் கொள்வதிலும், அவர்களைக் கட்டுக்கோப்பினுள் ஒன்றாக இணைத்துச் செயற்படுவதிலும் விசாலமான பங்களிப்பினை ஆற்றியுள்ளார்.
'இஸ்லாம் எங்கள் வழி, இன்பத் தமிழ் எங்கள் மொழி, மறைவழி எங்கள் அறவழி, கலைப்பணி எங்கள் உயிர்ப்பணி.” என்ற அடிப்படைக் கொள்கையுடன் செயற்பட்டுவரும் இவர், 1972ம் ஆண்டில் மர்ஹும் ஐ.எல்.ஏ.றஹீம் ஆசிரியர் அவர்கள் எழுதிய இஸ்லாமிய சரித்திர நாடகமான "உமரே பாறுக்" நாடகத்தின் மூலமாக அறிமுகமானார்.
இதைத் தொடர்ந்து இவர் சுமார் 17 நாடகங்களில் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவை. காலத்தின் குரல்கள், நாளை நமதே, விடியும்வரை, அரபு இஸ்ரவேல் போர், கயிறு, அவலட்சணம், சவக்காலையில் பணம், கல்யாணத்தில் கலாட்டா, காதிக் கோட்டில் கலாட்டா, ஆயிரம் பீத்தல், நொச்சிப்பத்தை கண்ட போடி, கொண்டோடி கோவிந்தன், கிருமிகள், உயில் போன்றனவாகும். வசூல் நாடகங்களை நடத்தி அதன் மூலம் பெறப்பட்ட நிதியில் ‘கலைக்கூடம் பொதுப்பணி மன்றத்தினூடாக பல்வேறு பட்ட சமூகசேவைகளைப் புரிந்துள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 1666 பக்கங்கள் 42-45