ஆளுமை:பரமேஸ்வரி, அருணாசலம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:44, 23 செப்டம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமேசுவரி
தந்தை அருணாசலம்
தாய் செல்லம்மா
பிறப்பு 1962.07.04
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமேஸ்வரி, அருணாசலம் (1962.07.04) கண்டியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அருணாசலம்; தாய் செல்லம்மா. கல்வியை யாழ்ப்பாணம் திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்திலும், திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார்.

1993ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை, கட்டுரை, நாட்டார் பாடல், இசையும் கதையும், பாடல், சிறுவர்கதை, சிறுகதை எழுதுவதுடன் தாளலயம், வில்லுப்பாட்டு என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். சிறுவர் நாடகங்களுக்கு பயிற்சி வழங்கி வருகிறார். திருமறைக்கலாமன்றத்தின் திருகோணமலை இணைப்பாளராக செயற்பட்டு வருகிறார் பரமேஸ்வரி. வரும் வசந்தகாலம் எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுதியொன்றை வெளியிட்டுள்ளார். மற்றுமொரு சிறுகதை தொகுதியொன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

விருதுகள்

2018ஆம் ஆண்டு திருமறைக்கலாமன்றத்தின் இயக்குனர் விருது.

2016ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் அமைச்சினால் வித்தகர் விருது.

2013ஆம் ஆண்டு திருமறைக்கலாமன்றத்தின் தலைமைத்துவம் ஒருங்கிணைப்பாளருக்கான விருது.

குறிப்பு : மேற்படி பதிவு பரமேஸ்வரி, அருணாசலம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.