ஆளுமை:புனிதம், பேரின்பராஜா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:01, 19 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புனிதம், பேரின்பராஜா
தந்தை -
தாய் -
பிறப்பு -
ஊர் -
வகை எழுத்தாளர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

புனிதம், பேரின்பராஜா ஒர் எழுத்தாளர். இலங்கை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று பட்டதாரியான இவர் பத்தாண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். பின்னர் புலம்பெயர்ந்து பிரித்தானியாவுக்கு சென்று லண்டன் பல்கலைக்கழகத்தில் ‘பல்கலாச்சார’த் துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆங்கிலப் பாடசாலைகளில் மொழியியல் வல்லுநராகக் கடமையாற்றியதோடு, ஆங்கில ஆசிரியர்களுக்கு விரிவுரையாளராகவும், செயலாளராகவும் செயலாற்றியுள்ளார்.


1987 ஆம் ஆண்டு ஹரோவில் தமிழ் பாடசாலை ஒன்றை ஆரம்பிக்க உதவியதோடு ‘பாடல் மூலம் தமிழ்’ என்ற நூலினை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் பாடற்தொகுப்பு தற்பொழுது இறுவெட்டாக வெளிவந்துள்ளது.இவரது பாடல்கள் 2004 ஆம் ஆண்டு பிரித்தானிய மகாராணியாரின் முன்னிலையில் மேடையேற்றம் செய்யப்பட்டது. மேலும் இவரது சமூக சேவைகள் குறித்து 2004ஆம், 2012 ஆம் ஆண்டுகளில் மாநகர மேயரின் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புக்கள்