ஆளுமை:தனபாக்கியம், குணபாலசிங்கம்
நூலகம் இல் இருந்து
Mathubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:11, 14 டிசம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | தனபாக்கியம், குணபாலசிங்கம் |
தந்தை | - |
தாய் | - |
பிறப்பு | - |
இறப்பு | - |
ஊர் | ஏழாலை |
வகை | எழுத்தாளர், தொல்லியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தனபாக்கியம், குணபாலசிங்கம் யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேந்த எழுத்தாளர். இவர் தமிழகத்தில் தொல்லியலை சிறப்புத்துறையாகப் பயின்று, வடமொழியில் பி.ஏ சிறப்புப் பட்டத்தையும், தொல்லியல் முதுகலைமானிப் பட்டத்தையும் பெற்று, கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இந்துநாகரிகத் துறையில் விரிவுரையாளராளராகப் பணியாற்றியவராவார்.
இலங்கையில் தொல்லியல் ஆய்வுகளும் திராவிட கலாச்சாரமும், தமிழகப் பூர்வீக வரலாறும் அரிய செய்திகளும், மட்டக்களப்பு மான்மியம் ஓர் ஆராய்ச்சி, வங்க இளவரசர் விஜயன் வரலாறும், இலங்கையில் சிங்கள் இன, மொழி, எழுத்துத்தோற்ற, வளர்ச்சி நிலைகளும், சைவ சித்தாந்தமும் விஞ்ஞான உலகமும், மானிட வரலாறு, குமரிக்கண்டம் முதல் சுமேரியாவரை தமிழர் வரலாறு, பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள் போன்ற பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்