ஆளுமை:கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:29, 9 அக்டோபர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை
தந்தை தளையசிங்கம்
தாய் மங்கையற்கரசி
பிறப்பு 1947.04.13
ஊர்
வகை மருத்துவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கலைவாணி, உக்கிரப்பெருவழுதிப்பிள்ளை (1947.04.13 - ) புற்றுநோய் மருத்துவர். இவரது தந்தை தளையசிங்கம்; தாய் மங்கையற்கரசி. இவர் தனது இளமைக்காலக் கல்வியை காங்கேசன்துறை அமெரிக்க மிஷன் பாடசாலை, சாவகச்சேரி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கற்றுப் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவப்பீடத்திற்குச் சென்றார். மருத்துவத்தில் புற்றுநோய் தொடர்பான நுண்ம ஆராய்ச்சி, கதிரியக்க மருத்துவம், நோய் நுண்ம நச்சாய்வு போன்ற பல்வேறு துறைகளில் நிபுணத்துவப் பயிற்சிகளையும் பட்டங்களையும் பெற்றுள்ளார்.

இவர் இலங்கை வானொலி நடத்திய சிறுகதை, நாடகப் போட்டிகளில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளார். இவர் புற்றுநோய் தொடர்பான கட்டுரைகளை பத்திரிகைகளில் எழுதியதுடன் வானொலி, தொலைக்காட்சிகளில் புற்றுநோய் தொடர்பான பல கருத்துக்களைக் கூறி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இவர் வைத்தியத் தொழிலுடன் யோகாசனம், புகைப்படம் எடுத்தல், சமையல், தோட்டக் கலை ஆகியவற்றிலும் ஈடுபாடுடையவர்.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 49-56