ஆளுமை:சந்திரா, சிவதாசா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:34, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சந்திரா, சிவதாசா
தந்தை பேரம்பு செல்லையா
தாய் தங்கச்சியம்மா
பிறப்பு 1951.10.16
இறப்பு -
ஊர் அல்வாய்
வகை நாடகக் கலைஞர், இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரா, சிவதாசா (195110.16) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர், இசைக் கலைஞர். இவரது தந்தை பேரம்பு செல்லையா; தாய் தங்கச்சியம்மா. இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியிலும், நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றுள்ளார். கல்வி கற்ற காலங்களில் எந்த போட்டிக்கு சென்றாலும் 1ஆம் இடத்தையே பெற்று தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார். மேலும் ஆர்மோனியத்தை ஆரம்பத்தில் கிருஷ்ணபிள்ளை அவர்களிடமும் பின்னர் மு.பொன்னையா அவர்களிடமும் கற்று 1966ஆம் ஆண்டு அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் அரங்கேற்றியுள்ளார். இதன் சிறப்பம்சம் என்னவெனில் இவரே பாடி ஆர்மோனியத்தையும் இவரே வாசித்து தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.

தம்பிஐயா, கலாமணி, சிவபாதம்கிளி, பர்வதாமணி, சாரதாவதி விஜயநாதன், கீதாமணி கமலேந்திரன் போன்ற நாடக கலைஞர்களுடன் இணைந்து இவர் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.மேலும் 1965களில் பல அரசியல் மேடைகளில் இவர் தனது ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது பிள்ளைகள் இரத்தினாந்தி, சரசாங்கி ஆகியவர்கள் நாடகங்களிலும் இலவசக் கச்சேரிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவருடைய மகன் இரத்தினமேனன் மிருதங்க கலைஞர் ஆவார்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சந்திரா,_சிவதாசா&oldid=315611" இருந்து மீள்விக்கப்பட்டது