ஆளுமை:வசந்தா, ஐயாத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:21, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வசந்தா, ஐயாத்துரை
தந்தை வைரமுத்து, வி. வி.
தாய் இரத்தினம்
பிறப்பு 1945.01.05
இறப்பு -
ஊர் அல்வாய்
வகை நாடகக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தா, ஐயாத்துரை (1945.01.05) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை வைரமுத்து, வி. வி.; தாய் இரத்தினம். யாழ் நடேஸ்வராக் கல்லூரியில் இவர் கல்வி பயின்றுள்ளார். சிறுவயது முதலே நடனம், நாடகம் என்பனவற்றில் ஆர்வம் மிக்க இவர் இதுவரை பல நாடகங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தையான கலாநிதி நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்கள் உருவாக்கிய வசந்த கான சபா என்ற சபையின் மூலமே இவர் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். இவரது தந்தையுடன் இணைந்து சந்திரமதி வேடத்திலும் நடித்துள்ளார். மேலும் நீர்கொழும்பில் நிறைகுடம் என்ற சமூக நாடகத்தில் கதாநாயகியாகவும், பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் பஸ்மாசுர மோகினி என்ற நாடகத்தில் மோகினியாவும் நடித்துள்ளார். புத்தூர் ஶ்ரீ விஸ்ணு வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு நடனம், நாடகம் போன்றவற்றை பழக்கியுள்ளார்.

இவர் முதன் முதலாக அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தில் தான் நடித்துள்ளார். இதே நாடகத்தில் தனது 72ஆவது வயதிலும் அரிச்சந்திரன் வேடத்தில் அரியாலை கலைமகள் நிலையத்தில் நடித்துள்ளார்.