ஆளுமை:மனோகரி, சற்குருநாதன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:55, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மனோகரி, சற்குருநாதன்
பிறப்பு 1958.01.03
ஊர் கோண்டாவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மனோகரி, சற்குருநாதன் (1958.01.03) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த இசைக் கலைஞர். வாய்ப்பாட்டு, இசைநாடகம் ஆகிய துறைகளில் தனது கலைப்பணியை ஆற்றி வரும் இவர் தனது 13ஆவது வயதிலேயே இசை நாடகத்தில் நடித்து பாடத் தொடங்கியுள்ளார். மா. ஶ்ரீரங்கநாதன், நடிகைமணி வைரமுத்து ஆகியோரிடம் இவர் கலைப் பயின்றுள்ளார்.

மயிலங்காடு கருணாகரப் பிள்ளையார் கோயில், ஏழாலை களபாவோடை அம்மன் கோயில், மயிலங்காடு நாகபூஷணி அம்மன் கோவில், தொண்டமானாறு செல்வச்சந்நிதியான் ஆச்சிரமம் போன்ற பல பிரபலமான இடங்களில் இவர் தனது இசைக் கச்சேரிகளை நடாத்தி வருவதோடு இவரது பல இசை நாடகப் பாடல்கள் ஒலிப்பேழைகளாகவும், இறுவெட்டுக்களாகவும் வெளியிடப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் இலங்கை வானொலி நாடக மேடைகளிலும் பல பாடல்களை பாடியுள்ளார். சத்தியவான் சாவித்திரி இசை நாடகத்தில் பல தடவைகள் சாவித்திரியாக நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

2014.04.20ஆம் ஆண்டு வட இலங்கை சுதேச வைத்திய சபையினால் நடாத்தப்பட்ட யாழ் கோடை திருவிழாவின் போது பாரம்பரிய சுதேச வித்துவான் ஊக்குவிப்புச் சங்கத்தினால் இவருக்கு இசை சமூக திலகம் எனும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 76