ஆளுமை:அருஷா, ஜெயராஜா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:24, 23 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருஷா
தந்தை அருள்தாஸ்
தாய் வாஷிஹா
பிறப்பு 1986.07.06
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருஷா, ஜெயராஜா (1986.07.06) திருகோணமலையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை அருள்தாஸ்; தாய் வாஷிஹா. ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் கற்றார். சிறுவர் உளவியல் தொடர்பான டிப்ளோமாவையும் ஆங்கில டிப்ளோமாவையும் முடித்துள்ள இவர் முன்பள்ளியொன்றை நடத்தி வருகிறார். பாடசாலைக்காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ள அருஷா கவிதை, கதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். சமயம் சார்ந்த சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரான அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை என்ற தலைப்பில் வரலாற்று நூல் ஒன்றை 2017 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் உள்ள அன்பு இல்லத்தில் உறுப்பினராக இருந்து அங்குள்ள பிள்ளைகளுக்கு சேவை செய்து வருகிறார். ஆதிமொழி உதவும் கரங்கள் என்னும் அரச சார்பற்ற அமைப்பொன்றை நிறுவி அதனூடாக பின்தங்கிய கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கிவருதோடு அவர்களுக்கு கல்வி ரீதியிலான கருத்தரங்குகள் போன்ற உதவிகளையும் செய்து வருகிறார். ஆதிமொழி உதவும் கரங்களின் ஸ்தாபகராகவும் அருஷா இருக்கிறார்.

படைப்புகள்

  • அன்னை தங்கம்மா சண்முகம்பிள்ளை

குறிப்பு : மேற்படி பதிவு அருஷா, ஜெயராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அருஷா,_ஜெயராஜா&oldid=313896" இருந்து மீள்விக்கப்பட்டது