ஆளுமை:நஜிபா, எம்.ஐ
பெயர் | நஜிபா |
தந்தை | முகம்மது இப்ராஹிம் |
தாய் | சின்னக்கிளி |
பிறப்பு | 1981.11.10 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நஜிபா, எம்.ஐ (1981.11.10) மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முகம்மது இப்ராஹிம்; தாய் சின்னக்கிளி. பெண்ணியா என்ற புனைபெயரில் இலக்கிய உலகிற்கு பரீட்சயமானவர் நஜிபா. நேசம் அல்லது நெல்லி மரம் என்ற முதல் கவிதை சரிநிகர் பத்திரிகையில் 1994ஆம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்தும் இவரின் ஆக்கங்கள் வீரகேசரி, மூன்றாவது மனிதன், காலச்சுவடு, பிரவாகம் (தொலைக்காட்சி இதழ்), ஊடறு இணையத்தளம், உயிர்வெளி, வேற்றாகி நின்ற வெளி, பெயல் மணக்கும் பொழுது, மை ஆகியற்றிலும் வெளிவந்துள்ளன. என் கவிதைக்கு எதிர்த்தல் என்ற தலைப்பு வை (2006), இது நதியின் நாள் (2008) ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
விருதுகள்
கொழும்பில் நடைபெற்ற விபவியின் சுதந்திர இலக்கிய விழாக்களில் பெண்ணியா, சிறந்த கவிதைகளுக்காக மூன்று முறை விருது பெற்றுள்ளார்.
”இது நதியின் நாள்” என்ற கவிதை என்ற கவிதை நூலுக்காக இலங்கை இலக்கியப் பேரவையின் 2008ஆம் ஆண்டுக்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் யாழ் இலக்கிய வட்டத்தின் 2008ஆம் ஆண்டுக்கான மூதறிஞர், கவிஞர் வே.ஐயாத்துரை ஞாபகார்த்த விருது என்பவற்றை பெற்றுள்ளார்.
படைப்புகள்
வளங்கள்
- நூலக எண்: 949 பக்கங்கள் 61
- நூலக எண்: 10329 பக்கங்கள் 32-33
- நூலக எண்: 1994 பக்கங்கள் 55-56
- நூலக எண்: 4327 பக்கங்கள் 14
- நூலக எண்: 9403 பக்கங்கள் 4
- நூலக எண்: 10062 பக்கங்கள் 20
- நூலக எண்: 10329 பக்கங்கள் 32-33
- நூலக எண்: 10332 பக்கங்கள் 39-40
- நூலக எண்: 10332 பக்கங்கள் 51-55
- நூலக எண்: 11143 பக்கங்கள் 26