ஆளுமை:புவஸ்ரினா, மெய்யழகன்
பெயர் | புவஸ்ரினா |
தந்தை | மெய்யழகன் |
தாய் | கொலஸ்ரிக்கா |
பிறப்பு | 1997.11.25 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
புவஸ்ரினா, மெய்யழகன் (1997.11.25) யாழ்ப்பாணம், நாவற்குழியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மெய்யழகன்; தாய் கொலஸ்ரிக்கா. ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியிலும் இடைநிலை, உயர்நிலைக் கல்வியை வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் கற்றார். தற்பொழுது யாழ் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பயில்வதற்கு நுழைவுக்காகக் காத்திருக்கிறார். 10 வயதிலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ள எழுத்தாளர் கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். இவரின் ஆக்கங்கள் வளம்புரி நாளிதழ், ஒளியரசி, யாழகம் ஆகிய சஞ்சிகைளிலும் பாடசாலையின் சஞ்சிகையான மேம்புனலிலும் வெளிவந்துள்ளன. இவளின் ஏக்கம், என்று தணியும் ஆகிய இரு கவிதைத் தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஆயிரம் கவிஞர்களின் கவிதை நூலிலும் இவரின் கவிதை இடம்பெற்றுள்ளது.
விருதுகள் பாடசாலை அதிபரினால் அலையரசி என்னும் பட்டம் 2016ஆம் ஆண்டு வழங்கி இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார்.யாழ் கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
குறிப்பு : மேற்படி பதிவு புவஸ்ரினா, மெய்யழகன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.