ஆளுமை:வதனி, ஶ்ரீதரன்
பெயர் | வதனி |
தந்தை | குமாரசுந்தரம் |
தாய் | பாலாம்பிகை |
பிறப்பு | 1955.03.07 |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | இசை |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வதனி, ஶ்ரீதரன் (1955.03.07) யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்த இசைத்துறையை சேர்ந்த ஆளுமையாளர். இவரது தந்தை குமாரசுந்தரம் (தவில் வித்துவான்); தாய் பாலாம்பிகை. அளவெட்டி அருணோதயாக் கல்லூரியில் கல்வி கற்றுள்ளார். இவர் பிரபல மேடை பாடகியாகவும் நாட்டிய அரங்கேறற்றங்கள் பலவற்றில் பாடியும் பாராட்டு பெற்றுள்ளார். வவுனியா இந்து மாமன்றக் கீதம் உட்பட இவரின் பல இசைப் பாடல்களுக்கு இசையமைத்து பாடியும் புகழும் பாராட்டும் பெற்றவர். கீர்த்தனாலயா என்ற பெயரில் ஒரு மன்றத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார். இசைக்குயில், சங்கீத ரத்னா, கலைஒளி, சங்கீத சிரோமணி, கலாபூணம் ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார். வவுனியா மாவட்டத்தில் இவர் செய்த இசைப்பணிக்காக இவருக்கு கலை வித்தகி எனும் கௌரவப் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
விருதுகள் முதலாமைச்சர் விருது சிறந்த அறநெறி அசிரியர் விருது
குறிப்பு : மேற்படி பதிவு வதனி, ஶ்ரீதரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.