ஆளுமை:நெலோமி, அன்ரனி குரூஸ்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 10 ஜனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (படைப்புகள்)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நெலோமி
தந்தை சூசைநாயகம்
தாய் டொலறோஸ்
பிறப்பு 1971.11.22
இறப்பு -
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நெலோமி, அன்ரனி குரூஸ் (1971.11.22) மன்னாரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சூசைநாயகம்; தாய் டொலறோஸ். மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் கல்வியைக் கற்ற இவர். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியாவார். வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் தற்பொழுது விரிவுரையாளராக உள்ளார். மன்னாரைச் சேர்ந்த மறைந்த எழுத்தாளர் கவிஞர் நாவண்ணன் எனும் புனைப்பெயரைக்கொண்ட சூசைநாயகம் இவரின் தந்தையாவார். 1987ஆம் ஆண்டு எறும்பூ... என்னும் சிறுகதையின் ஊடாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார் எழுத்தாளர் நெலோமி, அன்ரனி குரூஸ். பாதுகாவலன், தினமுரசு ஆகிய பத்திரிகைகளில் இவர் சிறுகதைகளை எழுதி வந்துள்ளார். இவரின் நாட்டம் பின்னர் கவிதைத்துறைக்குச் செல்ல பல கவியரங்குகளிலும் பங்குபற்றியுள்ளார். இவரின் கூடிக்குதிப்போம் எனும் நூல் 2015ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தின் சிறந்த சிறுவர் இலக்கிய நூற் பரிசுக்காக தெரிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் 2018ஆம் ஆண்டு வெங்கலச் செட்டிக்குள பிரதேச கலை இலக்கிய சேவைக்காக வெங்கல ஜோதி விருதும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் நெலோமி, அன்ரனி குரூஸ் அமுதநதி என்னும் கலை இலக்கிய சமூக காலாண்டிதழை வெளியிட்டு வருகின்றார்.

குறிப்பு : மேற்படி பதிவு நெலோமி, அன்ரனி குரூஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • ஆத்மாவின் இராகங்கள்-கவிதைத்தொகுப்பு
  • தியாகபொம்மைகள்-சிறுகதைத் தொகுப்பு
  • பூமாலைகள் புனிதமடைகின்றன-சிறுகதைத் தொகுப்பு
  • வண்ணப்பூக்கள் - சிறுவர்பாடல்
  • நினைவுத்தூறல்- கவிதைத் தொகுப்பு
  • கூடிக்குதிப்போம் - சிறுவர் நாடகம்
  • வன்னியூர்க்கவிராயர் சிறுகதைகள்
  • இனியொருகாலம் இதுபோல் வருமா..இலுப்பைக்குளம் ஊர் வரலாறு
  • பாட்டுப்பாடவா - சிறுவர் பாடல்

வளங்கள்

  • நூலக எண்: 15136 பக்கங்கள் 76-79