பகுப்பு:யாழ் நாதம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:35, 2 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

யாழ் நாதம் இதழானது கொழும்பினைக் களமாகக் கொண்டு 1993 தொடக்கம் வெளிவந்த இதழாகக் காணப்படுகின்றது. இது யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கக் கொழும்புக் கிளையின் வெளியீடு ஆகும். இதன் ஆசிரியராக திருமதி சிவகாமி அம்பலவாணர் அவர்கள் காணப்படுகின்றார். இது ஆண்டு மலராக வெளிவந்துள்ளது. குறித்த மாணவர் சங்கத்தின் ஆண்டுக்கொருமுறையான கலை நிகழ்வுச் சந்திப்பின் விளைவாக இவ்விதழ் உருப்பெற்றுள்ளது. எழுத்தாற்றலின் மூலம் நல்ல விடங்களை சமூகத்திற்கு அறிமுகம் செய்யவும், அறிவை விருத்தி செய்யவும் குறித்த பழைய மாணவர்களினால் ஆக்கங்கள் படைக்கப் பட்டு இவ்விதழானது வெளியிடப்படுகின்றது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக கலை நிகழ்வுக் குறிப்புக்கள், நினைவுக்குறிப்புக்கள் முதலான விடயங்கள் காணப்படுகின்றன.

"யாழ் நாதம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்

இந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.

"https://noolaham.org/wiki/index.php?title=பகுப்பு:யாழ்_நாதம்&oldid=493292" இருந்து மீள்விக்கப்பட்டது