பாலபாடம் மூன்றாம் புத்தகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பாலபாடம் மூன்றாம் புத்தகம்
354.JPG
நூலக எண் 354
ஆசிரியர் ஆறுமுக நாவலர்
நூல் வகை பாடநூல்
மொழி தமிழ்
வெளியீட்டாளர் ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச
-வித்தியாசாலை அறக்கட்டளை
வெளியீட்டாண்டு 2000
பக்கங்கள் 6 + 92

[[பகுப்பு:பாடநூல்]]

வாசிக்க


நூல்விபரம்

சைவசமயத்தைப் பின்பற்றும் தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் அநேக நீதிசாரங்களையும், சைவசமய சாரங்களையும் திரட்டி வசனரூபமாக நாவலரவர்கள் எழுதினார். முதல் பாலபாடத்தின் இறுதியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் என்னும் நீதிநூல்களையும் 2ம் பாலபாடத்தில் அவைகளுக்கு உரைகளையும் எழுதிச்சேர்த்து 1850இல் அச்சிட்டார். சைவர்கள் அறியவேண்டிய உண்மையான தமிழ்க்கல்வியும், அவர்கள் பின்பற்றவேண்டிய நீதிநெறிகள் பற்றிய குறிப்பும் இணைத்து 1852இல் முதல் இரு பாலபாடங்களும் அச்சிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியில் ஒளவையார் அருளிய நல்வழியையும், சிவப்பிரகாச சுவாமிகள் அருளிய நன்னெறியையும் உரையுடன் சேர்த்து இந்த 3வது தொகுதியை வெளியிட்டார்.


பதிப்பு விபரம்
பால பாடம்: மூன்றாம் புத்தகம். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர். சிதம்பரம் 608001: தவத்திரு ஆறுமுகநாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை, 24, மாலைகட்டித் தெரு, 15வது பதிப்பு, 2000. 1வது பதிப்பு, 1882. (சிதம்பரம் 608001: சபாநாயகம் அச்சகம், 176, கீழரத வீதி). 6 + 92 பக்கம், விலை: இந்திய ரூபா 10. அளவு: 18 * 12 சமீ.


-நூல் தேட்டம் (1285)