பகுப்பு பேச்சு:இதழ்கள் தொகுப்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
  • ஜனதர்ம போதினி - ஆசிரியர்: யோவேல் போல்,காலம்: 1920 கள், யாழ்ப்பாணம்
  • தொழிலாளி வார இதழ் - 1960 கள் - சுபத்திரன் கவிதை வெளிவந்த இதழ்
  • பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்ச்சங்கத்தின் இளங்கதிர் என்ற இதழைத் தொடக்கி அதனைத் தொடர்ந்து நடத்த உதவி செய்தார்.

யேர்மனி

அறுவை

அன்றில்

  • ஆசிரியர்: குமாரு மதிவாணன்
  • வெளியீட்டாளர்
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1996
  • சுழற்சி: மாதாந்தம்
  • விபரிப்பு: அன்றில் 1996இல் ஜெர்மனியில் இருந்து வெளிவந்த சஞ்சிகை. இதன் ஆசிரியர் குமாரு மதிவாணன். இது செருமானிய தமிழாலய ஆசிரியர் குமாரு. மதிவாணனால், மாணவர்களின் தமிழ்மொழி ஆற்றலையும், கலை ஆற்றலையும் ஊக்குவிக்கு முகமாக தொடங்கப்பெற்றது.*

தமிழாலய மாணவி தீபாவினால் வரையப் பெற்ற ஓவியத்துடன் ஒக்டோபர் மாத (1996) சஞ்சிகை வெளிவந்தது.

  • இணைப்புகள்: குரும்ப்புச்சிட்டி கனகரத்தினம் சேகரிப்புக்கள்

சிறுவர் அமுதம்

  • ஆசிரியர்: சின்ன இராஜேஸ்வரன்

"ஜேர்மனியில் முதன்முதலாக சிறுவர்களின் தமிழறிவுக்கும் தமிழ்மொழி வளர்ச்சிக்குமாக 'சிறுவர் அமுதம்' என்னும் சிறுவர் இலக்கிய மாத சஞ்சிகையை உருவாக்கி தமிழ் அமுதத்தைச் சிறுவர்களுக்குக் கொடுத்தார். காலத்துக்கு ஏற்றவகையில், பழைய கதைகளையும் புதிய முறையிலும், புதிய சிந்தனைகளுடனும் அமைத்துக் கொடுத்தார். சின்னச் சின்னக் கதைகளின்மூலம் நல்லெண்ணங்களை ஏற்படுத்தினார். பலநாட்டு அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் அவர்களின் மனித நேயச் சேவைகளையும் இலகுவான தமிழ்மொழி நடையில் எழுதி சிறுவர்களுக்கு தமிழ்மொழிமூலம் வாசிக்கும் தன்மையையும் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தார்." http://old.yarl.com/forum/index.php?showtopic=1335

கலைவிளக்கு

  • எஸ். பி. நாதன்
  • தமிழ் மக்கள் புதிய கலாச்சாரக் குழு
  • டிசம்பர், 1986
  • https://ta.wikipedia.org/s/10p7

இரவல்தூண்டில்

  • ஆசிரியர்: கடலோடிகள்
  • வெளியீட்டாளர்: பு.ஜ.ம.முன்னணி
  • இடம்: யேர்மனி
  • காலம்: 1992
  • சுழற்சி: இரு மாதத்துக்கு ஒரு இதழ்
  • விபரிப்பு: இரவல்தூண்டில் பெப்ரவரி, 1992 இலிருந்து டோர்ட்மூண்ட், யேர்மனியிலிருந்து வெளிவரத் தொடங்கிய இதழ்.
  • இணைப்புகள்: (4) - http://www.padippakam.com/document/iravalthoondil/iravalthoondil01.pdf