பகுப்பு:நூல்தேட்டம்
நூல்தேட்டம் இதழானது 1990 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் இருந்து வெளிவந்த காலாண்டு இதழாகக் காணப்படுகின்றது. குறித்த காலகட்டத்தில் ஈழத்தில் வெளியாகிய நூல்கள், சஞ்சிகைகள் முதலானவற்றின் வெளியீட்டுச் செய்திகளைத் தாங்கி நூலின் பிறப்பு, இருப்பு, அளவு, வடிவமைப்பு முதலான செய்திகளையும் பலரும் அறியும் வகையில் இவ்விதழானது ஒரு தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் ஆசிரியராக என். செல்வராசா அவர்கள் காணப்பட்டுள்ளார். இதனை ஆரம்பத்தில் அயோத்தி நூலக சேவைகள் வெளியிட்டுள்ளது. அவ்வகையில் இதன் உள்ளடக்கங்களாக நூற்பட்டியல், வகுப்பாக்க ஒழுங்கு, நூலாசிரியர் அட்டவணை, நூல் தலைப்பு அட்டவணை, நூலாய்வுக் குறிப்பு மற்றும் பொதுவிடயங்கள் என்பன காணப்பட்டுகின்றன. பல்வேறு காரணங்களினால் இது இரண்டு இதழ்களுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
"நூல்தேட்டம்" பகுப்பிலுள்ள பக்கங்கள்
இந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.