ஆளுமை:குமரன், எஸ். ரி
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:35, 21 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | குமரன் |
தந்தை | தவராசா |
தாய் | தங்கரத்தினம் |
பிறப்பு | 1983.01.20 |
ஊர் | தெல்லிப்பளை |
வகை | நாடகநெறியாளர், நவீன நாடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
குமரன், தவராசா (1983.01.20 - ) தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகநெறியாளர், நவீன நாடகவியலாளர், இயக்குனர் புத்தாக்க அரங்க இயக்கம். இவரது தந்தை தவராசா; தாய் தங்கரத்தினம். இவர் ஆரம்பக் கல்வியைத் தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளியிலும் உயர்கல்வியைத் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் கற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கக் கலைகளும் என்னும் பாடத்தில் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணிப் பட்டத்தை முதலாம் தரத்தில் பெற்றுக் கொண்டார். பட்ட மேற்கல்வி டிப்ளோமாவைக் கல்வி முகாமைத்துவம், உளவியல், ஊடகம் ஆகிய துறைகளில் பெற்றுக் கொண்டார். சிறுவயதிலிருந்து நாடகம், இலக்கியத்துறை, சமயப்பணி ஆகியவற்றில் ஈடுபாடு காட்டினார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நாடக ஆசிரியராகப் பணியாற்றியவர்.