ஆளுமை:ஸ்ரீகுமரன், சுப்பிரமணியம்
பெயர் | ஸ்ரீகுமரன் |
தந்தை | சுப்பிரமணியம் |
தாய் | பத்மாவதி அம்மையார் |
பிறப்பு | 1971.05.04 |
ஊர் | சுன்னாகம் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸ்ரீகுமரன், சுப்பிரமணியம் (1971.05.04 - ) யாழ்ப்பாணம், சுன்னாகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் பத்மாவதி அம்மையார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வெளிவாரி கலைப் பட்டதாரியான இவர், இயல்வாணன் என்னும் பிரபலமான புனைபெயரிலும் பத்மமகன், எஸ்.எஸ் குமரன், சு. சங்கிலிகுமாரன், சினேகன், ஏகலைவன், இவான், விழிச்சான் குஞ்சு, சிவறஞ்சினி ஆகிய புனைபெயரிலும் நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை, விமர்சனம் என்பவற்றை எழுதியதுடன் 1996 முதல் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியப் பயிற்சிக்காக இணைந்து பின்னர் பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
சுன்னாகம் பொது நூலகத்தில் தனது வாசிப்புத் தேடலை ஆரம்பித்த இவர், ஆரம்பத்தில் கையெழுத்துச் சஞ்சிகைகளை எழுத ஆரம்பித்தார். பாடசாலைக் காலத்தில் 'துறவில் வரும் காடு' நாவலையும் சில சிறுகதைகளையும் கவிதைகளையும் எழுதினார். சுன்னாகத்தில் அக்காலத்தில் முத்தமிழ் மன்ற நூலகத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவராவார். இவரது சிறுகதைகளில் 1990 ஆனி 03 ஆம் திகதி ஈழநாடு பத்திரிகையில் 'உள்ளத்து உறுதி' என்னும் சிறுகதையையும் ஆனி 10 ஆம் திகதி முரசொலிப் பத்திரிகையில் 'அமைதியைத் தேடி' என்னும் சிறுகதையும் பிரசுரமானது. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் 'யாரொடு நோவோம் என்ற பத்தி எழுத்தை எழுதியுள்ளார். 'செல்லையாத் தாத்தாவும் செல்லக் குழந்தையும்' என்ற சிறுவர் பத்தி எழுத்தையும் எழுதியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 2214 பக்கங்கள் 15