ஆளுமை:விமலா, யோகநாதன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:15, 4 சூலை 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | விமலா, யோகநாதன் |
பிறப்பு | |
ஊர் | அச்சுவேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
விமலா, யோகநாதன் யாழ்ப்பாணம், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நடனக் கலைஞர். இவர் ஆரம்ப நடனப்பயிற்சியைக் கொழும்பைச் சேர்ந்த ஶ்ரீமதி ஜெயலட்சுமி கந்தையாவிடம் பெற்றதுடன் மேலதிகப் பயிற்சியைத் தமிழ்நாடு பரதசூடாமணி நாட்டியப் பள்ளியில் கே.லக்ஷ்மணனிடம் பயின்று நாட்டிய நுணுக்கங்களையும் செயல் வடிவங்களையும் நன்கு தெரிந்து கொண்டார்.
இவர் அரச பாடசாலை நடன ஆசிரியராக நியமனம் பெற்றதுடன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, மானிப்பாய் மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆகிய யாழ்ப்பாணக் கல்லூரிகளில் தனது ஆசிரியப் பணியை மேற்கொண்டார். இவர் சாயி நர்த்தனாலயம் என்னும் பெயரில் நல்லூரில் நடனப்பள்ளி ஒன்றினை நிறுவினார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 143