ஆளுமை:மதியாபரணம், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:04, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மதியாபரணம்
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1937.03.25
இறப்பு 2000.07.22
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மதியாபரணம், கார்த்திகேசு (1937.03.25 - 2000.07.22) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாட்டுக்கூத்துக் கலைஞர். இவரது தந்தை கார்த்திகேசு. இவர் சிறுவயதிலிருந்து தந்தை பாடும் நாட்டுக் கூத்துக்களைக் கேட்டும் அவற்றை மனப்பாடம் செய்தும் தானும் தந்தையார் போன்று நாட்டுக்கூத்துக்களுக்கு ஆட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு இத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவர் 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அண்ணாவியாராகவும் கூத்துக்கலைஞராகவும் செயற்பட்டு அரியாலை, புங்குடுதீவு, குரும்பசிட்டி ஆகிய இடங்களில் நாட்டுக்கூத்துக்களை ஆற்றுகை செய்துள்ளார். இவர் நாட்டுக்கூத்தில் காணப்படும் கதையம்சம், மேடை வரவுக் கவி, விருத்தம், தரு கொச்சகம், கல்வெட்டு, ஆசிரியம், நாட்டுக் கூத்தின் ஆட்டம் போன்ற அம்சங்களை முற்றுமுழுதாக உள்ளடக்கிக் குசலவன் நாட்டுக் கூத்தை 1998 ஆம் ஆண்டு பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் நடாத்திய நாட்டுக்கூத்துப் போட்டியில் அரங்கேற்றி இரண்டாவது பரிசைக் சுவீகரித்துக் கொண்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 161