ஆளுமை:பொன்மணி, குலசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்மணி, குலசிங்கம்
தந்தை பொன்னு செல்லையா
பிறப்பு 1928.08.18
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்மணி, குலசிங்கம் (1928.08.18 - ) இசைக் கலைஞர். இவரது தந்தை பொன்னு செல்லையா. இவர் உயர்தரக் கல்வி வரை பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் கல்லூரியில் பயின்று, இசைக் கல்வியைச் சென்னை கலாஷேத்திராவில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத சிரோன்மணி பட்டத்தையும் கலாஷேத்திராவில் வாய்ப்பட்டுக்கான முதற்தர டிப்ளோமாச் சான்றிதழையும் பெற்றார். இவர் தனது பதின்னான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார்.

1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாளர், மேலதிகப் பணிப்பாளர், பணிப்பாளர் என்ற நிலையை எய்தினார். இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலைமையில் இயக்கிய இலங்கைப் பாடகர்களின் ஈழத்துப் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்பாடல் நிகழ்ச்சிகளைச் சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பிற்காகக் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 09-16