ஆளுமை:பற்குணநாதன், கனகசபை

நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:02, 12 அக்டோபர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பற்குணநாதன்
தந்தை கனகசபை
பிறப்பு 1950.07.19
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பற்குணநாதன், கனகசபை (1950.07.19 - ) யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கனகசபை. இவர் வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் தரம் - 06 இல் சித்தி பெற்று ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளில் ஆற்றல் பெற்று விளங்கியதோடு, இளமைக் காலத்தில் அரியாலை திடீர் நாடகமன்றத்தில் இணைந்து பல நாடகங்களில் நடித்துள்ளார்.

இவர் ஈழத்தின் பல பாகங்களில் மேடையேற்றப்பட்டதும் ஆயிரத்து ஐந்நூறு தடவைகளுக்கு மேலாக மேடையேறியதுமான வெளிக்கிடடி விஸ்வமடுவுக்கு என்னும் நகைச்சுவை நாடகத்தில் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கும் இவர், இருநூறுக்கும் அதிகமான அரங்குகளைக் கண்டவராவார்.

இவருக்கு 2009 ஆம் ஆண்டு அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் சிறந்த நாடகக் கலைஞர் என்னும் கௌரவ விருது வழங்கப்பட்டதோடு 2008 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திருநெல்வேலி காளியம்மன் இந்து இளைஞர் மன்றம் இவரது கலைப்பணிக்காகப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

{{வளம்|7571|176}