ஆளுமை:சிவலிங்கம், இர.
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:42, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிவலிங்கம் |
பிறப்பு | 1932.05.17 |
இறப்பு | 1999.07.09 |
ஊர் | ஹட்டன் |
வகை | பேச்சாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவலிங்கம், இர. (1932.05.17 - 1999.07.09) ஹட்டனைச் சேர்ந்த பேச்சாளர், சட்டத்தரணி. இவர் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் கல்வி கற்று இந்தியப் பல்கலைக்கழகத்தில் பொருளியற் துறையில் உயர்கல்வி பெற்றுக் கல்வியியல், சட்டத் துறைகளில் பட்டம் பெற்றவர். தான் கல்விகற்ற ஹட்டன் ஹைலண்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவிருந்து பின்னர் அதிபராக விளங்கினார்.
இவர் சிறுகதை எழுத்தாளராகவும் இலக்கிய விமர்சகராகவும் விளங்கினார். மலைநாட்டு மக்களின் வாழ்வு, அவர்களது மேம்பாடுகள் பற்றியதாக அவரது பேச்சும் செயலும் அமைந்திருக்கும். இவர் மலைநாட்டு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம், தாயகம் திரும்பியோர் தேசிய பேரவை, புலம்பெயர்ந்தோர் சங்கம், நலிந்தோர் நல மையம், நீலகிரி மனித உரிமை அமைப்பு ஆகியவற்றை நிறுவி மக்களின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றியுள்ளார்.
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 115-118
- நூலக எண்: 13875 பக்கங்கள் 01-50
- நூலக எண்: 1663 பக்கங்கள் 31-35