ஆளுமை:சிதம்பரம்பிள்ளை, விசுவநாதர்
நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:49, 5 செப்டம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | சிதம்பரம்பிள்ளை |
தந்தை | விசுவநாதர் |
தாய் | பாக்கியலட்சுமி |
பிறப்பு | 1875.11.22 |
இறப்பு | 1959.11.15 |
ஊர் | வேலணை |
வகை | மருத்துவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிதம்பரம்பிள்ளை, விசுவநாதர் (1875.11.22- 1959.11.15) வேலணையைச் சேர்ந்த ஓர் செங்கண்மாரி சிறு பிள்ளை வைத்தியராவார். இவரது தந்தை விஸ்வநாதர்; இவரது தாய் பாக்கியலட்சுமி. பரியாரியார் என்று அறியப்படும் இவர் வைத்தியம் பார்க்கும் பாங்கு சிறப்பானது. தனது வீட்டில் நோயாளிகளைத் தங்கவைத்துச் சிகிச்சையளித்துக் குணமாக்கி அனுப்புவார். இவர் வைத்திய சேவைக்கு அப்பால் 1932 ஆம் ஆண்டு வட்டாரத் தேர்தலில் இரண்டாம் வட்டார அங்கத்தவராகப் போட்டியின்றித் தெரிவுசெய்யப்பட்டுப் பிணக்குகளைத் தீர்த்துவைக்கும் பணியைச் செய்தவர். இதன் பின் இவர் கிராம சங்கத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுப் போக்குவரத்து பாதைகள், வாய்க்கால் வீதிகள் அமைத்தல் என பல சமூகச் சேவைகளை ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 379-381