ஆளுமை:சச்சிதானந்தன், கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:45, 7 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சச்சிதானந்தன்
தந்தை கார்த்திகேசு
பிறப்பு 1940.03.30
ஊர் கோண்டாவில்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சச்சிதானந்தன், கார்த்திகேசு (1940.03.30 - ) யாழ்ப்பாணம், கோண்டாவிலைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கார்த்திகேசு. ஆரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாஜன வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரியிலும் கொக்குவில் இந்துக் கல்லூரியிலும் கற்றுச் சித்தியடைந்த இவர், பட்டப்படிப்பை வெளிவாரியாக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பயின்றார்.

உறவும் பிரிவும் (1964), தீக்குள் விரலை வைத்தால் (1972), மர்மப்பெண் (1974), கர்ப்பக் கிருகம் (1974), காகித ஓடம் (1974), சொர்க்கமும் நரகமும் (மாணிக்கம் இதழ்த் தொடர்), கனலும் புனலும் (மாணிக்கம் இதழ்த் தொடர்) ஆகியவை இவரது புதினங்கள்.

கே.எஸ்.ஆனந்தன் என்னும் புனைபெயரில் ஈழத்து இலக்கியத்துறையில் நுழைந்தார். இவர் புனைகதை, நாடகம், ஆய்வுக்கட்டுரை, இலக்கியவிமர்சனம் ஆகிய துறைகளில் ஆற்றல் மிக்கவர். இவரது சிறுவர் இலக்கியத்திற்காக யாழ் இலக்கிய வட்டம் இவரைக் கௌரவித்துள்ளது. அத்தோடு நாடகத்திற்காக அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் இவருக்குத் தங்கப்பதக்கம் பரிசளித்தது. இவர் தமிழக முன்னணிப் பத்திரிகைகளான கல்கி, கலைமகள், ஆனந்தவிகடன், குமுதம் முதலாக ஈழத்துச் சஞ்சிகைகள் பத்திரிகைகளிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 49
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 13