ஆளுமை:றிச்சாட் அருளையா, கார்த்திகேசு (கல்லூர் பித்தன்)
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:11, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | றிச்சாட் அருளையா |
தந்தை | கார்த்திகேசு |
தாய் | சோதிமுத்து |
பிறப்பு | 1916.07.21 |
இறப்பு | 1995.01.25 |
ஊர் | கல்முனை |
வகை | ஆசிரியர், அதிபர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
றிச்சாட் அருளையா, கார்த்திகேசு (1916.07.21 - 1995.01.25) கல்முனையைச் சேர்ந்த ஆசிரியர், அதிபர். இவரது தந்தை கார்த்திகேசு உபதேசியார்; தாய் சோதிமுத்து. இவர் கல்லூர்ப் பித்தன் என்னும் புனைபெயரைக் கொண்டவர். இவர் முதலைக்குடா மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியிலும் மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைப் பெற்றுக்கொண்டார்.
இவர் கல்முனை லீஸ் உயர்தரப் பாடசாலை, கல்முனை பாத்திமா கல்லூரி, பெரிய கல்லாறு மகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராகவும் பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பணியாற்றினார்.
இவர் கல்முனை தமிழ் இலக்கியக் கழகக் காப்பாளராகவும் கல்முனை மாவட்ட ஆசிரியர் சங்கத் தலைவராகவும் கல்முனை பொது நலச் சேவைச் சங்கத் தலைவராகவும் இருந்து பணி செய்துள்ளார்
வளங்கள்
- நூலக எண்: 3771 பக்கங்கள் 125