ஆளுமை:மரிக்கார் ராம்தாஸ், சத்தியவாகீஸ்வரன்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:27, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | ராம்தாஸ் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ராம்தாஸ், எஸ். ஓர் திரைப்படக் கலைஞர். இலங்கையில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் அதிகமானவற்றில் நடித்துள்ள இவர், கலைவாழ்வில் 25 வருடங்களைப் பூர்த்தி செய்தமைக்காக 1990 இல் வெள்ளி விழாக் கொண்டாடியுள்ளார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஒலிபரப்பாகிய "கோமாளிகள் கும்மாளம்" என்ற நாடகத்தொடரை எழுதியதுடன் மலையோரம் வீசும் காற்று, எதிர்பாராதது, காணிக்கை போன்ற பல தொலைக்காட்சி நாடகங்களில் நடித்ததோடு எழுதித் தயாரித்தும் இருக்கின்றார்.
இவர் குத்துவிளக்கு, கோமாளிகள், ஏமாளிகள், புதிய காற்று, மாமியார் வீடு, நான் உங்கள் தோழன், நாடு போற்ற வாழ்க, Blendings (ஆங்கிலப்படம்), நொமியன மினிசு (சிங்களப் படம்), ஷார்மிளாவின் இதய ராகம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளதோடு புரோக்கர் கந்தையா, சுமதி, காதல் ஜாக்கிரதை, கலாட்டா காதல் ஆகிய மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10571 பக்கங்கள் 121-125