ஆளுமை:முருகேசு, சுவாமிநாதர்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 3 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசு
தந்தை சுவாமிநாதர்
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை ஆசிரியர், சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகேசு, சுவாமிநாதர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆசிரியர், சமூக சேவையாளர். இவரது தந்தை சுவாமிநாதர். இவர் யாழ் இந்துக் கல்லூரியில் தமது கல்வியைப் பெற்றவர்.

இவர் உடற்பயிற்சி போதனாசிரியராகப் பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் கடமையாற்றினார். இவரின் சேவைக்காலத்தில் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் உதைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள். இவர் யாழ். மாவட்டப் பாடசாலைகளுடனும் தீவுப்பகுதி பாடசாலை மாணவர்களைச் சினேக பூர்வமான போட்டிகளிலும் நேரடிப் போட்டிகளிலும் விளையாடச் செய்து, மாணவர்கள் பல வெற்றிகளைப் பெறுவதற்குக் காரணமாகவிருந்தார்.

இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாண சேவைகள் தடைப்பட்டிருக்கும் காலங்களிலெல்லாம் தனது சொந்த மோட்டார்ப் படகைச் சேவையிலீடுபடுத்தி மக்களின் பிரயாணக் கஷ்டத்தைப் போக்க உதவினார். இவர் பி.ரி மாஸ்டர் என அழைக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 155-156