ஆளுமை:பஞ்சரத்தினம், கனகரத்தினம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:01, 2 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சரத்தினம்
தந்தை கனகரத்தினம்
பிறப்பு 1944.09.20
இறப்பு 2006.12.30
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பஞ்சரத்தினம், கனகரத்தினம் (1944.09.20 - 2006.12.30) யாழ்ப்பாணம், நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட இசையமைப்பாளர். இவரது தந்தை கனகரத்தினம். யாழ் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுத் திருகோணமலை இந்துக் கல்லூரியில் ஆய்வுகூட உத்தியோகத்தராகப் பணி புரிந்தார்.

இவர் கலைவாணி இசைக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் பல பாடகர்களுக்கும் வாத்திய இசைக் கலைஞர்களுக்கும் தொழில் ரீதியாக வாய்ப்பளித்தார். புலம்பெயர்ந்து பாரிஸிற்குச் சென்ற இவர், அங்கு ஹைரோன் இசைக்குழுவினை நிறுவி, ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தன் பயணத்தை மேற்கொண்டதுடன் பிரபல வானொலி அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத்துடன் இணைந்து பாரிஸ் நகரில் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சிக்கு இசை மீட்டினார். இவர் தென்னிந்தியச் சினிமாப் பாடகர்கள், இலங்கைப் பாடகர்கள் என இரு சாரரையும் இணைத்து சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் என்னும் தலைப்பில் இசை அல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 103
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 110-11