ஆளுமை:தயாநிதி, வடிவேலு

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:01, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தயாநிதி
தந்தை வடிவேலு
பிறப்பு 1962.06.20
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர், ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தயாநிதி, வடிவேலு (1962.06.20 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைச் சேர்ந்த நாடகக் கலைஞர், ஆசிரியர். இவரது தந்தை வடிவேலு. இவர் அண்ணாவியார் செல்வமணி, அண்ணாவியார் பாலதாஸ், அண்ணாவியார் யேக்கப் அல்பிறட், குழந்தை சண்முகலிங்கம், அரசையா, மெட்றாஸ்மயில் ஆகியோரிடம் இசைநாடகம், கூத்து போன்ற கலைகளைக் கற்று 1988 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் தனது ஓய்வு நேரங்களில் பாரம்பரியக் கலைகள் மேம்பட நாட்டார் வழக்கியற் கழகம், பாரம்பரியக் கலைகள் மேம்பாட்டுக் கழகம் ஊடாகக் கலைப்பணி செய்தார். இவர் காத்தவராயன், வீரத்தளபதி, வேழம் படுத்த வீராங்கனை, பாண்டியன், சாம்ராட் அசோகன், பண்டார வன்னியன், சங்கிலியன் போன்ற நாட்டுக்கூத்துக்களிலும் வள்ளி திருமணம், பவளக்கொடி, சத்தியவான் சாவித்திரி, பூதத்தம்பி போன்ற இசை நாடகங்களிலும் உடையார் கமலம், மயில் ஏறும் வடிவேலர், வில்லங்கம், பாராட்டும் பரிசும், பெரியோர் வார்த்தை, சலங்கை கட்டிய சிங்கம், ஒளி பிறந்தது போன்ற நாடகங்களிலும் நடித்ததுடன் வேதநூல் என்னும் நாட்டுக்கூத்தினை எழுதியுள்ளார்.

இவருக்கு வட இலங்கை சங்கீத சபையால் நாடக கலா வித்தகர் பட்டம் வழங்கப்பட்டதோடு, யாழ்ப்பாணப் பிரதேசச் செயலகத்தால் சான்றிதழ் வழங்கியும் நாவாந்துறை றோ. க. த. பாடசாலை, இணுவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கேடயம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 179
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:தயாநிதி,_வடிவேலு&oldid=195881" இருந்து மீள்விக்கப்பட்டது