ஆளுமை:சிவானந்தராஜா, சிற்றம்பலம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:27, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவானந்தராஜா
தந்தை சிற்றம்பலம்
தாய் பொன்னம்மா
பிறப்பு 1950.09.21
ஊர் அளவெட்டி
வகை இசைக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தராஜா, சிற்றம்பலம் (1950.09.21 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சிற்றம்பலம்; தாய் பொன்னம்மா. இவர் வட இலங்கை சங்கீத சபையில் ஆசிரியர் தராதரப் பத்திரம் வரை பயின்று சங்கீத கலாவித்தகர் பட்டம் பெற்றார். மேலும் அகில இலங்கை இந்து மாமன்றத்தில் ஓதுவார் பி. ஏ. எஸ். இராஜசேகரனிடம் திருமுறையினைப் பயின்றதோடு இசை தொடர்பான ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார்.

இவர் கர்நாடக சங்கீதக் கையேடு, கர்நாடக சங்கீதம், மேளகர்த்தாக்கள், இலக்கிய இசைச்சாரல், தகவல்கள், அருளிசைப் பாடல்கள், ஈழத்துக் கலைத்துறைப் பதிவுகள், கலைமுகங்கள் ஓர் அறிமுகம் ஆகிய நூல்களையும் கலைஞர்களின் கலைப்பணி என்ற கட்டுரையையும் வெளியிட்டுள்ளார்.

இவர் சங்கீத கலா வித்தகர், திருமுறைப் பண்ணிசை மணி, கலைவாரிதி ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 553