ஆளுமை:சிவானந்தன், முத்துசாமிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:26, 31 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவானந்தன்
தந்தை முத்துசாமிப்பிள்ளை
பிறப்பு 1932.08.20
ஊர் சங்கானை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவானந்தன், முத்துசாமிப்பிள்ளை (1932.08.20 - ) யாழ்ப்பாணம், சங்கானையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முத்துசாமிப்பிள்ளை. முதுகலைமாணி, கல்வி டிப்ளோமாப் பட்டங்களைப் பெற்றுள்ள இவர், வட மாகாண ஆசிரியர் சங்கச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்து நமது நோக்கு, பலதும் பத்தும் எனப் பல பொதுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். சுதந்திரன் பத்திரிகையில் மூங்கில் திரைக்குப் பின் என்ற தொடர் பயணக் கட்டுரையை எழுதியுள்ளார். பேச்சு, இசை, கட்டுரைப் போட்டிகள் நடத்துதல், இலங்கையில் பல பாகங்களிலும் திருக்குறள், பட்டிமன்றங்கள், நாடகங்கள், வில்லுப்பாட்டுகள், இசைக் கச்சேரிகள் நடத்துதல், கனடாவிலுள்ள வடலியடைப்பு ஒன்றியத்தின் ஒன்றியக் கீதத்தை ஆக்கியமை, சோதிடக்கலை ஆராய்ச்சி செய்து பொதுமக்களுக்கு வழங்கியமை போன்றன இவரது பணிகளாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 21