ஆளுமை:அம்புறோஸ் பீட்டர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:20, 18 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அம்புறோஸ் பீட்டர் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அம்புறோஸ் பீட்டர் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இசைக்கலைஞர், நடிகர், எழுத்தாளர். இவர் பயிற்றப்பட்ட மறை ஆசிரியர் ஆவார். கொழும்பு திருமறைக் கலாமன்றத்தின் இணைப்பாளராகவும், கலாசுரபி கவின் கலைகள் பயிலக இயக்குனராகவும், கொழும்பு கிறிஸ்தவ கலைஞர் ஒன்றியத்தின் தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். தாய் எனும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்துள்ளார்.
கிறிஸ்தவ சமய எழுச்சி மன்றங்களுடன் நெருங்கிய தொடர்புடைய இவர் இயேசு கானங்கள், திருப்பாடல்கள், திருமணித்தியால வழிபாடு போன்ற 25 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவப் பாடல்களை ஒலி நாடாக்களாக வெளியிட்டுள்ளார். தேசிய மறைக்கல்வி நிலையம் இவருக்கு மறைச்சுடர் என்ற விருதையும், தேசிய சமூகத் தொடர்பாடல் நிலையம் சமூக தொடர்பாடல் விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 238-239