ஆளுமை:ஶ்ரீதயாளன், சின்னத்தம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஶ்ரீதயாளன்
தந்தை சின்னத்தம்பி
பிறப்பு
ஊர் கொக்குவில்
வகை பேச்சாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீதயாளன், சின்னத்தம்பி யாழ்ப்பாணம், கொக்குவிலைச் சேர்ந்த ஒரு பேச்சாளர். இவர் 1970 இல் கல்விப் பணியை ஆரம்பித்த்துடன் திருமலை, கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் சைவ ஆலோசகராகப் பணியாற்றியுள்ளதோடு யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றிப் பின்னர் கல்வித் திணைக்களக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரிந்துள்ளார்.

இவரது கணீரென்ற குரல் இலங்கையிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் வானொலி நேரடி அஞ்சல்களுக்கான நேயர்களின் மத்தியிலும் பிரபலமானது. இவரது திறமைக்காக 1984 இல் உடுவை சிவஞானவாரியத்தினால் சிவஞானதுரந்தர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளதோடு சித்தங்கேணி அரச அதிபரால் கானதமிழ் மணி என்ற பட்டத்தை இந்து கலாச்சார அமைச்சினால் கலைஞான கேசரி, இந்து குருமார் ஒன்றியத்தினால் வாகீசகலாபமணி என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 401 பக்கங்கள் 15
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 54