ஆளுமை:ரவீந்திரன், சின்னத்தம்பி
பெயர் | ரவீந்திரன் |
தந்தை | சின்னத்தம்பி |
தாய் | றோசம்ம்ா |
பிறப்பு | 1953.10.25 |
ஊர் | சாவகச்சேரி |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ரவீந்திரன், சின்னத்தம்பி (1953.10.25 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னத்தம்பி; இவரது தாய் றோசம்மா. இவர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும் யாழ்ப்பாணம் வதிரி-வடக்கு மெ.மி. பாடசாலையிலும் யாழ்ப்பாணம் கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலும் கல்வி கற்றார்.
இவர் வதிரி சி.ரவீந்திரன், வானம்பாடி, குளைக்காட்டான் ஆகிய புனைபெயர்களில் கவிதைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்பவற்றைப் பூம்பொழில், நான், மல்லிகை, ஞானம், ஈழநாடு, வீரகேசரி, தினக்குரல், தினகரன், தினபதி, சிந்தாமணி, தினமுரசு, நமது ஈழநாடு போன்ற இலங்கை தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பொறிகள், அக்னி, சுவடுகள் போன்ற இந்தியச் சஞ்சிகைகளிலும் இலங்கை வானொலிக் கவியரங்குகளான ஒலிமஞ்சரி, வாலிப வட்டம், கலைப்பூங்கா, பவளம் போன்றவற்றிலும் வெளியிட்டுள்ளார். இவரது கவிதைத் தொகுப்பான மீண்டு வந்த நாட்கள் வெளிவந்துள்ளது.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 103-106
- நூலக எண்: 15225 பக்கங்கள் 26-33