ஆளுமை:ஜெயராமசர்மா, மகாதேவ ஐயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெயராமசர்மா
தந்தை மகாதேவ ஐயர்
பிறப்பு
ஊர் தமிழ்நாடு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜெயராமசர்மா, மகாதேவ ஐயர் தமிழ்நாடு, தாராபுரத்தைப் பிறப்பிடமாகவும் இலங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை மகாதேவ ஐயர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சிறப்புப் பட்டத்தையும் கல்வியியல்துறை, சமூகவியற்துறை போன்றவற்றில் டிப்ளோமாப் பட்டங்களையும் கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலைத் தத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் ஆசிரியர், அதிபர், ஆசிரிய ஆலோசகர் ஆகிய பதவிகளுடன் கல்வித் திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் யாழ், பேராதனைப் பல்கலைக்கழகங்களின் வெளிவாரிப் பட்டப்படிப்புப் பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்தோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும் நாடகத் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் தமிழ்மொழி அடிப்படை இலக்கணம், தமிழ்ப்பாட வழிகாட்டி, வட்டுவில் முருகன் திருவூஞ்சல், ஆசிரியரும் அகமும், திருப்பம், நெஞ்சே நீ நினை, என் கடன், வள்ளுவர் பேசுகின்றார், வாழும் தமிழ், தமிழும் கிறிஸ்தவமும், கோவிலும் நாமும் போன்ற நூல்களையும் பத்துக்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டுகளையும் இருபதிற்கும் மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களையும் எழுதியுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 15220 பக்கங்கள் 05-06