ஆளுமை:நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை
பெயர் | நாகேந்திரன் |
தந்தை | சுந்தரம்பிள்ளை |
தாய் | சின்னம்மாள் |
பிறப்பு | |
ஊர் | மலையகம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நாகேந்திரன், சுந்தரம்பிள்ளை மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்; கலைஞர். இவரது தந்தை சுந்தரம்பிள்ளை; தாய் சின்னம்மாள். யாழ்ப்பாணம் பரமேசுவராக் கல்லூரியில் (தற்போதைய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) லண்டன் மற்றிக்குலேஷன் வகுப்பு வரை படித்த இவர் பின்னர் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கணக்கியல், சுருக்கியல், வர்த்தகம் முதலிய துறைகளிலும் கற்றுத் தேறினார். தொடர்ந்து 1944 இல் இலங்கை அரச சேவையிலே சேர்ந்து, சுருக்கெழுத்தராகப் பணியாற்றினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து கணக்காளராகவும் கணக்காய்வாளராகவும் பல்வேறு திணைக்களங்களிலே பணியாற்றி 1979 இல் இளைப்பாறினார்.
குத்துவிளக்கு என்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளதோடு அந்தக்காலத்து யாழ்ப்பாணம், அந்தக்காலத்து யாழ்ப்பாணம், ஆகிய நூல்களை எழுதியுமுள்ளார். ஆத்திரேலியக் கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மாருதி விருதை இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 10240 பக்கங்கள் 3-4