ஆளுமை:சதாசிவம், க.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்
பிறப்பு 1942.03.20
இறப்பு 2004.09.14
ஊர் புலோலி
வகை எழுத்தாளர், வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சதாசிவம், க. (1942.03.20 - 2004.09.14) யாழ்ப்பாணம், புலோலியைச் சேர்ந்த எழுத்தாளர், வைத்தியர். இவர் டயபராத் தோட்டத்தின் வைத்திய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

நாணயம் என்ற இவரது நாவல் வடமராட்சிப் பிரதேசத்தின் நாடித் துடிப்பு, மனித உறவுகளைப் பிணைக்கும் பந்தமாகிய சடங்குகள், நம்பிக்கைகள், பண்பாட்டம்சங்கள், எண்ணக் கருத்துகளின் உயிர்த்துடிப்பான பேச்சு வழக்கு ஆகியவற்றை எடுத்துக்காட்டும் படைப்பாகும். இவரது முதல் சிறுகதை புதுவாழ்வு என்பதாகும். யுகப்பிரவேசம் (1973), ஒரு அடிமையின் விலங்கு அறுகிறது (1982), ஒரு நாட் பேர் (1995), புதிய பரிமாணம் (1998), அக்கா ஏன் அழுகிறாய் (2003) ஆகிய ஜந்து சிறுகதைத் தொகுதிகளும், நாணயம் (1980), மூட்டத்தின்னுள்ளே (1983) ஆகிய இரு நாவல்களும் நூல் இவர் எழுதியவை ஆகும். இவற்றில் அவரது இரண்டு நாவல்களுமே தேசிய சாஹித்திய விருதுகளைப் பெற்றுள்ளன

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 214-217
  • நூலக எண்: 2038 பக்கங்கள் 32-33
  • நூலக எண்: 2068 பக்கங்கள் 04-11
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சதாசிவம்,_க.&oldid=177540" இருந்து மீள்விக்கப்பட்டது