ஆளுமை:நடராஜன், சோமசுந்தர ஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:48, 9 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் (Meuriy பயனரால் ஆளுமை:நடராஜன், எஸ்., ஆளுமை:நடராஜன், சோமசுந்தர ஐயர் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராஜா
தந்தை சோமசுந்தர ஐயர்
தாய் மனோன்மணி
பிறப்பு
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை அறிவிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராஜா, சோமசுந்தர ஐயர் யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த அறிவிப்பாளர். இவரது தந்தை சோமசுந்தர ஐயர்; தாய் மனோன்மணி. நடராஜன் புன்னாலைக்கட்டுவன் அரசினர் பாடசாலை, ஏழாலை விக்னேசுவரா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இவர் கல்வி கற்றுள்ளார்.

இலங்கை வானொலியில் வீ. ஏ. கபூர் தயாரித்து வழங்கிய வளரும் பயிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பின்னர் சிறுவர் மலர் நிகழ்ச்சியின் வானொலி மாமாவாக இருந்து அந்நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கினார். தொடர்ந்து ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து செய்திகளை வாசித்தும் வந்துள்ளார். மேலும் பலதும் பத்தும், முத்தி நெறி, செய்தியின் பின்னணியில், வெளிநாட்டுச் செய்தி விமரிசனம், தொழிலாளர் வேளை, சைவநீதி போன்ற நிகழ்ச்சிகளையும் தயாரித்து வந்துள்ளார்.

இந்து சமயக் கலாசார அமைச்சினால் சைவ நன்மணி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1027 பக்கங்கள் 57