ஆளுமை:ஞானசேகரன், தியாகராசா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானசேகரன்
தந்தை தியாகராசா
தாய் வலாம்பிகை
பிறப்பு 1941.04.15
ஊர் புன்னாலைக்கட்டுவன்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஞானசேகரன், , தியாகராசா (1941.04.15 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தியாகராசா; தாய் வலாம்பிகை. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் கல்விகற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் பெற்றார். இலங்கை மருத்துவக் கல்லூரியில் பயின்று வைத்தியராக புசல்லாவையில் பணியாற்றினார்.

1964ஆம் ஆண்டு கலைச்செல்வி எனும் சஞ்சிகையில் பிழைப்பு என்னும் தலைப்பில் இவரது முதலாவது சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து இலங்கையில் வெளிவந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகளை இவர் எழுதியுள்ளார். இவர் கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும், புரிதலும் பகிர்தலும் ஆகிய நேர்காணல்களையும் ஞானசேகரன் சிறுகதைகள், காலதரிசனம், அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும் முதலான சிறுகதை நூல்களையும் கவ்வாத்து, லயத்துச் சிறைகள், குருதிமலை, புதிய சுவடுகள் முதலான நாவல்களையும் அவுஸ்த்திரேலியப் பயணக்கதை எனும் பயண இலக்கியத்தையும் ஆக்கியுள்ளார்.

2000ஆம் ஆண்டில் 'ஞானம்' என்ற கலை இலக்கிய மாத சஞ்சிகையை ஆரம்பித்து தொடர்சியாக வெளியிட்டு வருவதோடு அதன் ஆசிரியராகவும் பணியாற்றுகின்றார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 222 பக்கங்கள் 152
  • நூலக எண்: 13943 பக்கங்கள் 25-34
  • நூலக எண்: 4393 பக்கங்கள் 145-148
  • நூலக எண்: 1649 பக்கங்கள் 25-28
  • நூலக எண்: 2019 பக்கங்கள் 14-22