ஆளுமை:வடிவேல், இராசையா
பெயர் | வடிவேல் |
தந்தை | இராசையா |
தாய் | கற்பகம் |
பிறப்பு | 1919.12.09 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வடிவேல், இராசையா (1919.12.09 - ) மட்டக்களப்பைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசையா; தாய் கற்பகம். இவர் ஶ்ரீ இராமகிருஷ்ண சங்க பாடசாலையில் கல்வி கற்றார். இவர் ஆசிரியராக பணியாற்றிய காலத்திலேயே சைவப் புலவர் பரீட்சைகளில் சித்தி அடைந்தார். பின்னர் ஶ்ரீ கோணேஸ்வரர் வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றினார்.
முதலில் இவர் 1993இல் எளிய தமிழில் உரை நடை எழுதி திருக்கோணேச்சர் வரலாற்றின் ஒரு பகுதியையும் தமிழ் மன்னன் குளக்கோட்டன் கால சமுக மரபுகளையும் சாதாரண மக்களும் விளங்கிக் கொள்ளும் வகையில் படைத்துள்ளார். இவரது படைப்புக்கு எடுத்துக்காட்டாக இலண்டன் மாநகரில் உடூட்டிங் (Tooting) சாலையில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் மண்டபத்தில் இவரது திருவுருவப்படம் தொங்கவிடப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட திருத்தலங்கள், திருகோணமலை கோணேசர் வரலாறு, சண்முகா சரணம், கோணாமலை அந்தாதி, திருமுறை பண்ணிசைத் திறனாய்வு உட்பட மேலும் பல நூல்களையும் ஆலடி விநாயகர் கோயில் லெட்சுமி நாராயணர் திருவூஞ்சல், அருள்மிகு இரத்தினசிங்கம் பிள்ளையார் திருவூஞ்சல், கம்பனிப் பிள்ளையார் திருவூஞ்சல், கருமாரியம்மன் கோயில் திருவூஞ்சல், சிவயோகபுரம் நடேசர் கோயில் திருவூஞ்சல் ஆகிய ஊஞ்சல் பாக்களையும் வில்லூன்றிக் கந்தன் தேரடிச் சிந்து, நெஞ்சுவிடு தூது, கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக் கீதம், கோணேசப் பெருமான் அருள் வேட்டற் பதிகம் ஆகிய 25க்கும் மேற்பட்ட கவிதை ஆக்கங்களையும் திருமந்திரத்தில் ஒரு மந்திரம், திருமூலமும் மந்திரமும், சிவ வழிபாடு, திவ்ய பிரபந்தங்களின் தமிழ்த்தேன் ஆகிய 30க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் இவர் படைத்துள்ளார்.
ஞான சிரோன்மணி, சைவ சித்தாந்த சிகாமணி, கதாப் பிரசங்கவாதி, திருமுறைச் செல்வர், கலைமாமணி, தேசிகமணி, பண்ணிசைச் செல்வர், இயற்றமிழ் வித்தகர், திருக்குறள் திலகம், கலாபூஷணம் ஆகிய கௌரவப் பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 15514 பக்கங்கள் 77-86
- நூலக எண்: 16357 பக்கங்கள் 235-249