ஆளுமை:அஹ்மத், யாஸீன் பாவா
பெயர் | அஹ்மத் |
தந்தை | யாஸீன் பாவா |
தாய் | சுலைஹா உம்மா |
பிறப்பு | 1945.04.29 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அஹ்மத், யாஸீன் பாவா (1945.04.29 - ) மட்டக்களப்பை சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை யாஸீன் பாவா; தாய் சுலைஹா உம்மா. இவர் அஹ்மத் வாழைச்சேனை அரசினர் முஸ்லிம் ஆண்கள் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், ஓட்டமாவடி சிரேஷ்ட பாடசாலையில் உயர்தரக் கல்வியையும் கற்றார். பின் அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலையில் முதலாந்தர தமிழ் ஆசிரியர் தராதரத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தினையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்ப்படிப்பு கல்வி டிப்ளோமா விசேட பட்டம் முதலியவற்றை கற்றார்.
1974ஆம் ஆண்டிலிருந்து ஓட்டமாவடி மகாவித்தியாலயத்திலும், 1977ஆம் ஆண்டிலிருந்து வாழைச்சேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், கணமூலை மகாவித்தியாலயத்திலும் இவர் அதிபராகக் கடமையாற்றியுள்ளார். பின் 1991ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றியுள்ளார். சமய சம்பந்தமான கட்டுரைகளையும், ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதி வந்த இவர் 1967ஆம் ஆண்டில் இளம்பிறை சஞ்சிகை வெளியிட்ட அடித்த கரங்கள் என்னும் சிறுகதை மூலமாக சிறுகதை இலக்கியத்துறைக்குள் புகுந்தார். இவர் மரணிக்கும் வரை 26 சிறுகதைகளையும், 30 கவிதைகளையும், 12 உருவகக்கதைகளையும், 07 நாவல்களையும், குறுநாவல்களையும், பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் புதிய தலைமுறைகள், வாழைச்சேனை ஒரு வரலாற்றுக் குறிப்பு, மொழியும் வழியும், முக்காடு, தரிசனம் நிழவின் நிழலில் போன்ற ஐந்து புத்தகங்களாக வெளிவந்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1672 பக்கங்கள் 68-73