ஆளுமை:அஸ்ஹர், அப்துல் காதர்
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:20, 20 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அஸ்ஹர் |
தந்தை | அப்துல் காதர் |
பிறப்பு | 1956.02.22 |
ஊர் | கேகாலை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அஸ்ஹர், அப்துல் காதர் (1956.02.22 - ) கேகாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அப்துல் காதர். இவர் கேகாலை/ மா/அல் அஸ்ஹர் மகா வித்தியாலயம், மாவனெல்லை ஸாஹிராத் தேசியக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். மேலும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராகக் கலைமாணிப் பட்டம் பெற்றுள்ளார். கேகாலை/ மா/ பள்ளிப் போருவ முஸ்லிம் வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றியுள்ளார்.
சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் என்பவற்றை எழுதியுள்ளார். இவரது முதலாவது சிறுகதை 1985.12.01 ஆம் திகதி சிந்தாமணிப் பத்திரிகையில் பிரசுரமானது. இவை தேசிய பத்திரிகைகளிலும், பிரதேசச் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1668 பக்கங்கள் 83-84