ஆளுமை:அஸ்ஹர், முகைதீன் பிச்சை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:23, 20 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | அஸ்ஹர் |
தந்தை | முகைதீன் பிச்சை |
தாய் | நுர்சபாயா |
பிறப்பு | 1947.07.06 |
ஊர் | கொழும்பு |
வகை | ஊடகவியலாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அஸ்ஹர், முகைதீன் பிச்சை (1947.07.06 - ) கொழும்பைச் சேர்ந்த ஊடகவியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை முகைதீன் பிச்சை; தாய் நுர்சபாயா. இவர் இலங்கை முஸ்லிம்களின் ஒரே தேசிய பத்திரிகையான நவமணியின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் அஜான், சுழியோடி, கூர்ச்செவியன், சத்யன், குலாப் ஆகிய பெயர்களில் மாண்புறு ரமழானில் மனதுக்கினிய சிந்தனைகள், உறுமும் கடலும் உலவும் நதியும் போன்ற நூல்களையும், பத்திரிகைகளில் செய்திகளையும் எழுதியுள்ளார்.
இவரது திறமைக்காக செளத்துக்ஹக், சாமஶ்ரீ, சத்தியஜோதி, ரத்தீனதீப, ஊடக ஜோதி, எழுத்துலக வேந்தர் போன்ற விருதுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 1740 பக்கங்கள் 16-22