ஆளுமை:பன்னிருகையா, வடிவேலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பன்னிருகையா
தந்தை வடிவேலு
பிறப்பு 1966.03.19
ஊர் காரைநகர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பன்னிருகையா, வடிவேலு (1966.03.19 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை வடிவேலு. இவர் செல்லத்துரை, சு. கணபதிப்பிள்ளை ஆகியோரிடம் ஆர்மோனிய இசையைப் பயின்று 1981ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகள், ஆலயங்கள், பொது நிறுவனங்களில் ஆர்மோனியம் இசைத்து, பாட்டுப் பாடியும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். பாடசாலை நிகழ்வுகள், வில்லுப்பாட்டு, சங்கீத கதாப்பிரசங்கம், மேடை நாடகம், காவடி நடனம், வாய்ப்பாட்டு இசை ஆகியவற்றிற்கு இவர் பகவாத்தியமாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். இவரது திறமைக்காக 2005இல் கலாசாரப் பேரவையினால் கலைஞான சுரபி, 2002இல் ஊர்காவற்துறை கலாசார சபையால் கலைஞான வித்தகர் போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 111