ஆளுமை:அருந்தவன், எலியாஸ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருந்தவன்
தந்தை எலியாஸ்
பிறப்பு 1944.09.10
ஊர் அல்வாய்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருந்தவன், எலியாஸ் (1944.09.10 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை எலியாஸ். ஆர்மோனியம், எக்கோடியன், மெண்டலின், ஓகன், கீபோட் முதலான மேலைத்தேய இசைக் கருவிகளை இவர் வாசித்துள்ளதோடு 1973ஆம் அண்டிலிருந்து தனது பணியை ஆற்றி வந்துள்ளார். கீபோட் போதனாசிரியராகவும், மெல்லிசைக் கவிதாலாயாவின் நிர்வாகியாகவும் இவர் கடமையாற்றியுள்ளதோடு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன மெல்லிசைக் குழுவிலும் பணியாற்றியுள்ளார். 2003ஆம் ஆண்டில் சுழிபுரம் திருநாவுக்கரசு நாடக மன்றத்தினால் பொன்னாடை போர்த்தியும், 2005இல் வலிகாமம் மேற்கு கலாசாரப் பேரவையினால் கலைவாருதி என்ற பட்டம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 108