ஆளுமை:நடராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நடராசா
தந்தை கந்தையா
பிறப்பு 1938.09.24
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நடராசா, கந்தையா (1938.09.24 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் அளவெட்டி சதானந்த வித்தியாலயத்தில் எஸ். எஸ். சி. வரை கற்று பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றார். வலிகாமம் வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும், இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் பகுதி நேர ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

1962ஆம் ஆண்டில் இசைக்கலை மன்றம் எனும் மன்றத்தினை ஸ்தாபித்து இசை வகுப்புக்களை நடாத்தினார். இவரது இசை ஆளுமையையும் கலைப்பணியையும் பாராட்டி கலைஞானகேசரி, சிவ கலாபூஷணம், கலைச்சுடர் ஆகிய பட்டங்கள் வழங்கப்பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 72
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:நடராசா,_கந்தையா&oldid=169057" இருந்து மீள்விக்கப்பட்டது